“அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு பாரு” என்று கிராமங்களில் சொல்வது வழக்கம்.
அப்பாவின் பழக்க வழக்கங்களைப் போல மகனது நடவடிக்கைகள் அமைந்திருந்தால் அவ்வாறு சொல்வார்கள்.
அப்பா கமல்ஹாசனைப்போல மகள் ஸ்ருதிஹாசனும் துணிச்சலுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார். அதனால் வருகிற விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொள்கிறார். திரை உலகில் கமல்ஹாசனின் பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருக்கின்றன.
அவரால் குள்ள அப்புவாக வரமுடியும். மூப்பெய்திய இந்தியன் தாத்தாவாக மாறமுடியும். முதிர்ந்த மூதாட்டியாக ,அவ்வை ஷண்முகியாக இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.சிலர் அரசியலுக்கு வரப்பயப்படுகிற நேரத்தில் தனித்து கட்சி தொடங்கி தேர்தல்களையும் சந்தித்தாகிவிட்டது.
அப்பாவைப்போலவே ஸ்ருதிஹாசனும் .!ஸ்டைலிஷ் நடிகை,ட்ரெண்ட் செட்டர் ,தைரியமானவர் ,பேஷன் மாஸ்டர் இப்படி பல கிரீடங்கள்.!
அண்மையில் உதடுகளுக்கு கருப்பு லிப்ஸ்டிக் போட்டு ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.
ஏகப்பட்ட விமர்சனங்கள்.கிண்டல்கள்.!
“என்ன சூனியக்காரி மாதிரி இருக்குன்னு சொல்றீங்களா? குட் ! சொல்லிட்டுப்போங்க.பெரிய பாராட்டுன்னு நெனைச்சுக்கிறேன்” என்று சொல்லுகிற துணிச்சல் வேறு யாருக்கு வரும்?