மும்பை, தானே பகுதியில் பொறி வைத்து வேட்டையாடியதில் இரண்டு நடிகைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்.
அதில் ஒருவர் தென்னிந்திய நடிகை.! ஊரை சொன்னாலும் பேரை சொல்லக்கூடாது என்கிறது போலீஸ் சட்டம்.!
தானே பகுதி, பஞ்சபகாடி என்கிற ஏரியாவில் இருக்கிற ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்திருக்கிறது.
பெரிய இடம். வம்பு தும்பு இல்லாமல் பிடிக்கணும் என்று இவர்களே ஒரு ஆளை செட் பண்ணி அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் .இரண்டு பெண்களுக்கு 3.60 லட்சம் என ரேட் பேசப்பட்டது.
மாட்டிய அந்த இரண்டு பெண்களும் சினிமா நடிகைகள்.! அவர்களில் ஒருவர் தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர். இருவரையும் விபசாரம் செய்வதில் இருந்து காப்பாற்றிய போலீஸ் மூன்று பெரிய சப்ளையர்களை கைது செய்திருக்கிறது.
சுனில் என்கிற விஷால் உத்தம்சந்த் ஜெயின் ,ஹசினா காலித் மேமன் ,சுவீட்டி சதா ஆகிய மூவரும் மும்பயில் படே ஆட்களாம்.
“கோவிட் கால வறுமை ,இதனால் நடிகைகளை வைத்து சம்பாதிக்கப்பார்த்தோம்” என்பது மூவரது வாக்குமூலம்.