தனுஷ் ரசிகர்கள் வெறியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார்.
கர்ணனை தொடர்ந்து தியேட்டரை தெறிக்க விட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் காத்திருந்தவர்களுக்கு இடியாக வந்து இறங்கியது அந்த செய்தி.
ஜகமே தந்திரம் தியேட்டருக்கு வராது ,ஓடிடி தளத்தில்தான் வெளியாகிறது .அதுதான் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த்தின் முடிவு .!
ஓடிடியில் வெளியாவதை நடிகர் தனுஷ் விரும்பவில்லை என்கிற செய்தி அதன் தொடர்ச்சியாக வெளியாகியது .
இந்த நிலையில் அந்த படத்தைப்பற்றி எந்த வித கருத்தையும் தன்னுடைய சோசியல் பக்கத்தில் தனுஷும் வெளியிடவில்லை.
இதனுடைய நீட்சிதான் வெளியான மற்றைய செய்திகள். தயாரிப்பாளர் சசிகாந்துக்கும் தனுஷுக்கும் மோதல் ,இந்தப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என்று தனுஷ் விரும்புகிறார். இதை மீறி தயாரிப்பாளர் நெட்பிளிக்சில் வெளியிடுகிறார் என்பதாக எல்லா மீடியாவும் செய்திகளை வெளியிட்டன.
தற்போது தயாரிப்பாளர் சசிகாந்த் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
“தனுஷுடனான எனது உறவு பற்றி எல்லா மீடியாவும் எழுதித்தள்ளிவிட்டன.
நானும் தனுஷும் கடந்த பத்து ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகவே இருந்து வருகிறோம் என்பதுதான் உண்மை.!
ஜெகமே தந்திரம் பற்றி எங்கள் இருவருக்கும் ஒத்த கருத்து இருந்தது. அந்த படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் ,ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்கிற அவரது கருத்து நல்லதுதான்!
ஆனால் வணிக ரீதியாகவும் பார்க்கவேண்டும் அல்லவா?
எனது பெருஞ்சுமையே வட்டி கட்டுவதுதான்! தற்போது கூட தியேட்டர்கள் எப்போது திறப்பார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.திறப்பார்களா மாட்டார்களா என்கிற சந்தேகம் இருக்கிறது.
அதே நேரத்தில் 200 மில்லியன் பார்வையாளர்கள் அந்த படத்தை ஓடிடி தளத்தில் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.அமெரிக்காவில் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.தயாரிப்பாளர் என்கிற முறையில் அந்த படம் பெருமளவு பார்த்து ரசிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை.”என்கிறார் சசிகாந்த்.