
இயக்குநர் ஏ.எல் .விஜய்யின் பிரமாண்ட படம் தலைவி. தமிழ் தெலுங்கு இரு மொழிப்படம் .ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமுடன் சொல்லப்பட்டிருக்கிற படம். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படவேண்டும் என்கிற ஆசை இயக்குநருக்கு இருந்தது. ஆனால் கொரானாவின் முரட்டுப்பிடியில் இந்தியா சிக்கித்திணறி மூச்சு விடமுடியாமல் சிலிண்டருக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. ஆஸ்பத்திரி தியேட்டர்களைத் தவிர சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் தலைவி சிறையிலேயே இருக்க வேண்டியதாகி விட்டது..
தலைவி படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என்பதில் விஜய் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்.அதனால் லாக் டவுன் முடிந்த பின்னரே தலைவியின் தலை தெரியும்.
இந்நிலையில் சத்தம் செய்யாமல் ஓடிடி தளத்துக்காக ஒரு படத்தை விஜய் இயக்கி முடித்து விட்டார் என்கிற செய்தி வந்திருக்கிறது.
நிவேதா பெத்துராஜ் ,மஞ்சிமா மோகன் ,ரெப்பா மோனிகாஜான் ,மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கிற படத்தில் நாயகனாக தெலுங்கு நடிகர் விசாகா சென் நடித்திருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.