பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவர்க்ள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இது மும்பை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் பகுதியில் 1922ம் ஆண்டு பிறந்த முகம்மது யூசுப் கான்,சினிமாவுக்காக தனது பெயரை திலீப் குமார் என மாற்றிக்கொண்டார் . மும்பை பாந்த்ராவில் வசித்து வரும் நடிகர் திலீப் குமார், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாலிவுட்டில் அண்டாஸ், ஆன், தேவதாஸ், கங்கா ஜமுனா, ராம் அவுர் ஷியாம் உள்பட 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சாய்ராபானுவை காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது 98 வயதாகிறது. இந்நிலையில், திடீரென இன்று காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள கர் இந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். நடிகர் திலீப்குமார் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.