எப்படி அதிக அளவில் பிற மாநில நடிக நடிகையர் தமிழில் நடித்துக்கொண்டிருக்கிறார்களோ அதே போல தமிழ் நடிகர்களும் பிற மாநிலங்களுக்கு செல்லலாம் அல்லவா .!
எஸ்,அதுதான் தற்போது தெலுங்கு தேசத்தில் நடக்கிறது. சூர்யா,கார்த்தி இருவரும் ஆந்திர மக்களின் அன்புக்குரியவர்களாகி விட்டனர் .இந்த பட்டியலில் மேலும் சிலர் சேருகிறார்கள்.
சொந்த மாநிலத்தில் அந்த மாநிலத்தவர் பிசியாக இருந்தால் அண்டை மாநிலத்து திறமைசாலிகளை அழைத்து பயன்படுத்துவது ஆரோக்கியமானதே.!
தில் ராஜு என்கிற தெலுங்கு படத்தயாரிப்பாளர் தமிழ் உலகத்துக்கும் நன்கு அறிமுகமானவர்தான்.!
அவர் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணுகிறார்.ஷங்கரை வைத்து மற்றொரு படமும் தயாரிக்கிறார் .
தற்போது அந்த வரிசையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ,பெரிய இயக்குநரை வைத்து படம் எடுக்க முன்வந்திருக்கிறது. மூன்று மொழிகளில் தயாராகும் அந்த படத்தின் நாயகன் தனுஷ். இந்த படத்தில் நடிப்பதற்கு மற்றொரு பிரபல நடிகர் தேவைப்படுவதால் அறிவிப்பு வெளியாக தாமதம் ஆகிறது.
இதில் இன்னொரு டிவிஸ்ட்டும் இருக்கிறது. இந்த மும்மொழி படத்தை தயாரிப்பதற்கு மிகவும் பிரபலமான டாப் ஹீரோவும் ஆசைப்படுகிறார் என்பதே.!
தனுஷ் இன்று ஆந்திராவில் விரும்பப்படுகிற நடிகர் ஆகிவிட்டார்.