டோலிவுட் மற்றும் பாலிவுட்டில்,’யே ஜவானி ஹை தீவானி’ மற்றும் ‘சாஹோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஈவ்லின் சர்மா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல் அறுவை சிகிச்சை நிபுணரும் தொழில் முனைவோருமான டாக்டர் துஷான் பிந்தியை கடந்த மே 15 அன்று ரகசிய காதல் திருமணம் செய்து கொண்டார்.
தனக்கு திருமணமான விஷயத்தையே இன்று காலை வரை மறைத்து வந்த நடிகை ஈவ்லின் சர்மா, தனது திருமணச் செய்தியை படத்துடன் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்,
மேலும் அப்புகைப்படத்துக்கு “என்றென்றும்” என்று தலைப்பிட்டுள்ளார், இதையடுத்து திரையுலக பிரபலங்கள்பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். .