தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை அனுஷ்கா, பாகுபலி படத்துக்கு பின் தனது உடல் எடை கணிசமாக கூடியதால் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். தற்போது தனது உடல் எடையை ஓரளவுக்கு குறைத்துள்ள நடிகை அனுஷ்காவுக்கு அவர் எதிர்பார்த்த மாதிரி படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சைலன்ஸ் படம் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
இதனால் புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தார்.இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் உருவாகும் காதல் ரொமான்ஸ் திரைப்படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞரை 40 வயதாகும் ‘முதிர்கன்னி’ காதலிப்பது போன்ற சர்ச்சை கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் 31 வயதான இளம் நடிகர் நவீன் பாலிஷெட்டி கதாநாயகனாக நடிக்க, 39 வயதான நடிகை அனுஷ்கா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுக்கிடையேயான இந்த வயது வித்தியாசம் இப் படத்தின் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் இந்த படம் பல சர்ச்சசைகளை சந்திக்கும் என்று இப்போதே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இப்படத்துக்கு ‘மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவீன் பாலிஷெட்டி தெலுங்கில் அடிப்படையில் ஸ்டேன்ட் – அப் காமெடியன். 2019 இல் வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ திரைப்படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார். 2021 இல் வெளியான ‘ஜதி ரத்னலு’ என்ற நகைச்சுவைத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நவீன் பாலிஷெட்டியை வசூலிலும் ஸ்டாராக்கியது குறிப்பிடத்தக்கது .