“வேலை இல்ல.அதனால நான் இன்னமும் வரி கட்டல “என்று சாமானியன் சொன்னால் வீட்டில் இருக்கிற சாமான், செட்டுகள் அரசாங்கத்தின் கைவசம் போய்விடும்.
ஆனால் ஒரு பணக்காரன் சொன்னால் அவனுக்கு ஸலாம் வைத்து விட்டு சலுகை வழங்கிவிட்டுப்போவார்கள். ஏனென்றால் இது சமதர்ம இந்தியா.
ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாத குடியரசு நாடு.!
கங்கனா ரனாவத் கூறுகிறார் “நான் பாலிவுட்டில் மிகவும் அதிகமாக சம்பளம் வாங்குகிற நடிகை .ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் என்னால் வரியை கட்ட முடியவில்லை.வேலை இல்லை ,அதனால் கட்ட முடியல “என்கிறார்.ஆனாலும் இவர் நல்லவர். அராஜக பணக்கார பட்டியலில் சேர்க்க முடியாதவர் .வரியை முறையாக கட்டவேண்டும் என்கிற உந்துதல் இருப்பவர்.
கொரானா கொள்ளை நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்திருப்பவர் கங்கனா. செலுத்தவேண்டிய பாக்கி வரிக்காக அரசு வரி போடுவதை வரவேற்கிறார் இவர். இம்முறைதான் தாமதாமாக வரி கட்டவேண்டியதாகிவிட்டது என்பதற்காக வருத்தமும் கொள்கிறார்.
தலைவி பட ரிலீசுக்காக காத்திருப்பதாக சொல்கிறார். தமிழக அரசியல்வாதிகளும் அந்த படத்துக்காகத்தான் காத்திருக்கிறார்கள்.