நட்சத்திர கிரிக்கெட் விவகாரத்தில் நடிகர்கள் அஜித்துக்கும் விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதாக சில இணைய தளங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் கூறியதாவது, ” நடிகர் சங்கத்தில் உள்ள அனைவரையும் நாங்கள் சமமாக மதிக்கின்றோம். அஜித்துக்கும் எனக்கும் என்றும் பிரச்சனை இருந்தது இல்லை. அவரை நான் அஜித் சார் என்று ஏன் கூப்பிடுவதில்லை என பலரும் கேட்கிறார்கள். எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவருடைய உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்” என்றவர், சிம்பு விவகாரத்தை பொறுத்தவரை திடீரென சங்கத்தில் இருந்து விலக இது லீக் கிளப் கிடையாது. சிம்புவின் விவகாரம் எங்களுக்கே புதுசாக உள்ளது. அவர் பிரச்சனை என்னவென்றால் சொன்னால், நிச்சயமாக அதை சரிசெய்வோம். மற்றபடி,சக நடிகராகவும் ஒரு சகோதரராகவும் ஐ லவ் சிம்பு” என்கிறார்.