ஆசை யாரைத்தான் விட்டது?
இயக்குநர் செல்வராகவன் தற்போது கீர்த்தி சுரேசுடன் ஜோடி சேர்ந்து சாணிக்காகிதம் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.
இதையடுத்து மீண்டும் தனுசுடன் புதுப்பேட்டை -2 படத்துக்காக இணைய உள்ளார்.
தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் கிடைத்த நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலவழித்து வருகிறார்.இது குறித்த பதிவுகளையும் அவ்வப்போது தனது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது காதல் மனைவி கீதாஞ்சலியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ள செல்வராகவன்,அதில்,’‘எனக்கே எனக்கு சொந்தமான தீபிகா படுகோன் கீதாஞ்சலி செல்வராகவன் ’’ என குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.