லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைவர் சுபாஸ்கரன்
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் “ சபாஷ் நாயுடு” படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி நடிகர் பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்சங்க பொதுச் செயலாளார் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் படத்தின் தலைப்பை தமிழ், ஹிந்தி, தெலுங்கு மூன்று மொழியிலும் அறிவித்தார்.
லைக்கா நிறுவனத்தின் சேர்மன் சுபாஸ்கரன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.
விழாவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் லைக்கா அதிபர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.