தமிழ்நாட்டினைப் பொருத்து தாடி வைத்தவரெல்லாம் தந்தை பெரியாராகிவிடமுடியாது.
இதைப்போல வட இந்தியாவினைப் பொருத்தவரை தாடி வைத்தவரெல்லாம் தேசிய கவி தாகூராகிவிட இயலாது.
பொதுவாக வெள்ளைத்தாடிக்கு ஒரு பெருமை இருக்கிறது.
கோவிட் 19 தொற்று பரவத் தொடங்கியதும் இந்திய பிரதமர் மோடி தாடியை வளர்க்கத் தொடங்கிவிட்டார்.
தாடி வளரத் தொடங்கியதும் அதை வைத்து பிரதமரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் ,சசிதருர் ஆகியோர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட தாடியின் வளர்ச்சி அதிகமாகிவிட்டது என்று ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஒரு டீக்கடைக்காரர் நூறு ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
“உங்கள் தாடியை முழுவதுமாக எடுத்துவிடுவதற்காக இந்த 100 ரூபாயை அனுப்பியிருக்கிறேன்.”என்று கூறியிருக்கிறார் அந்த டீக்கடைக்காரர் .அவரின் பெயர் அனில் மோரே .
ஒன்றிய அரசின் மீதுள்ள அதிருப்தியினால் அனுப்பியிருக்கிறேன். பிரதமர் மோடியை மனம் நோக செய்வதற்காக இல்லை என்பதாக சொல்லியிருக்கிறார் தேநீர் வியாபாரி.