பிரபல மலையாள பெண் இயக்குனரும் , நடிகையும், சமூக ஆர்வலருமான ஆஷா சுல்தானா சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார். அதில், பங்கேற்றபோது கொரோனா பாதிப்பே இல்லாத லட்சத்தீவுகளில் பிரபுல் கோடா படேல் தொற்று பரவலை செய்வதாகவும், லட்சத்தீவுகளை அழிக்க இந்திய அரசு அனுப்பி வைத்த உயிரியல் ஆயுதம் தான் பிரபுல் கோடா படேல் என்றும் கடுமையாக தாக்கி பேசினார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவர் அப்துல் காதர் காவல் நிலையத்தில் ஆயிஷா சுல்தானா மீது தேச விரோத புகார் அளித்தார், இதனை அடுத்து அவர் மீது 124A மற்றும் 153B ஆகிய பிரிவினையை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இது குறித்துஆயிஷா, தனது முகநூல் பக்கத்தில் ,தமது கருத்துக்களில் உறுதியாகவே இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஆயிஷா சுல்தானா மீது கேரளா போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.