மிகப்பிரமாண்டமாக தயாராகிற ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து அவருக்கு சம்பளமாக 12 கோடி ரூபா கொடுக்க முடிவு செய்தனர். சயீப் அலிகானின் இரண்டாவது மனைவிதான் கரீனா .
சீதையாக நடிக்க கரீனாவை தேர்வு செய்யலாமா? தகுதி இல்லாதவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் .அதுவும் 12 கோடி சம்பளமா? அநியாயம் !உடனடியாக ஆளை மாற்று என்கிற போர்க்குரல் தற்போது எழுந்திருக்கிறது. இதற்கு பாஜகவின் ஆதரவு இருக்கிறது.
அவர்கள் கங்கனாவை தேர்வு செய்ய சொல்கிறார்கள். தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர்தான் கங்கனா .இவர் பிரதமர் மோடியை ஆதரிப்பவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
யார் யாரை எந்தெந்த வேடங்களில் நடிக்கவைக்கவேண்டும் என்பதைக்கூட அரசியல்வாதிகள் தீர்மானிக்கிறார்கள் என்பது ஆரோக்கியமா?