மாடல் அழகியாக தன வாழ்க்கையை தொடங்கிய நடிகை ரைசாவில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து தமிழ்த்திரையுலகில், ‘பியார்பிரேமா காதல்’,தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களின் மூலம் நடிகையாகவும் களமிறங்கினார்.தற்போது எப் ஐ ஆர்.,காதலிக்க யாருமில்லை,அலிஸ்,தி சேஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா லாக் டவுன் காரணமாக படப்பிடிப்புகளின்றி வீட்டுக்குள் முடங்கியுள்ள ரைசா வில்சன், தனது பெரும்பாலான நேரங்களை சமூக வலைத்தளங்களில், தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவது,ரசிகர்களுடன் உரையாடுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ரசிகர்களுடனான உரையாடலின்போது ஒரு ரசிகர் அவரிடம்,” உங்களின் வாழ்க்கையில் காதல் தோல்வி அனுபவம் உண்டா? என கேட்க, அதற்கு ரைசா வில்சன் மிகவும் கூலாக,”ஆமாம். அது நடந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது .என்றவர்அடுத்த காதலுக்காக காத்திருப்பதாகவும் ‘மகா’ துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.அப்புறம் அப்ளிகேஷன் போடுறவங்க போட்டுக்குங்க……