கோர்ட்டில் லைகா – ஷங்கர் பிரச்னை..
நீங்களே பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியும் சிக்கல் முற்றியதே தவிர முடிவுக்கு வரவில்லை.
கமல்ஹாசனை பொறுத்த வரை இந்தியன்-2 படத்தை உடனடியாக முடித்து கொடுக்க கோர்ட் ஷங்கருக்கு உத்தரவிட்டால், உடனடியாக அப்பட த்துக்கு தனது விக்ரம் படத்துக்காக ஒதுக்கப்பட்ட தேதிகளை இந்தியன்-2 படத்துக்காக ஒதுக்கி விடுவது என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்., மேக்கப் விஷயத்தில் தனிப்பட்ட கவனம் இந்தியனுக்காக செலுத்த வேண்டிய கட்டாயம் கமலுக்கு இருக்கிறது.
இடைப்பட்ட தேதிகளை தனது விக்ரம் பட படப்பிடிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கிடையே கமல்ஹாசன் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காக ஒரு மாத கால்ஷீட்டை ஒதுக்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியது.
ஆனால் கமல்ஹாசனின் நடிப்பில் பக்கா கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகும் ‘விக்ரம்’ படத்தின் வேலைகளை முழுவேகத்தில் தொடங்கிவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் .
மெட்ராஸ், கபாலி, கேஜிஎஃப், கைதி, ராதே, உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநர்களாக பணியாற்றிய அன்புஅறிவு (இரட்டையர்கள்) விக்ரம் படத்தில் இணைந்துள்ளனர் என்கிற அதிரடி அறிவிப்பை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆக்சன் படவரிசைகளில் இந்தப்படம் மிகவும் முரட்டுத்தனமான காட்சிகளை கொண்டதாக இருக்கும் என்று நம்பலாம்.மேலும் அரசியல் பஞ்ச் களுக்கு குறைவே இருக்காது .
அன்பறிவ் இரட்டையர்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு காட்சிகளை படமாக்குவார்கள்,
கமல்ஹாசன் உடலில் எத்தனை இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டு குணமாகிய விவரம் அவருக்குத்தான் தெரியும். இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளை பொருத்து முதலில் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கோர்ட் தீர்ப்பை பொறுத்து கமல் இந்தியன்-2 படத்திலும் நடிக்கலாம் என்கிறது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வட்டாரம்.
மேலும் கமல்ஹாசனிடம், பாபநாசம்-2 திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என அடித்து சொல்கிறது.