நகைச்சுவைநடிகர் செந்தில் பெயரிலான டுவிட்டரில்,’மக்கள் உயிரைக்காக்க வேண்டிய நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அவசியமா? என்று கேட்டு பதிவிட்டிருந்ததாக செய்தி வெளியானது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடிகர் செந்தில். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்தார்.
தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கி முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்தை பதிவிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அந்தப்பதிவுகளை நீக்க வேண்டும். இதனால் தனது நிம்மதியே போய்விட்டதாகவும்
புகாரில் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சார்லியும் தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது குறித்து போலீசில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.