ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் சபாஷ் நாயுடு படத்தின் பூஜை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடந்தது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.இவ்விழாவில்
கமல் ஹாசன் பேசியதாவ து, “தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் தலைப்பாக ‘சபாஷ் நாயுடு’ இருக்கும். இந்தியில் ‘சபாஷ் குந்து’ என்று இருக்கும். காமெடி த்ரில்லராக உருவாக்க இருக்கிறோம். தமிழில் நான் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன்.
ராஜீவ் குமார் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு பிறகு நடிப்பதில் சந்தோஷம். ஸ்ருதி ஹாசனைப் பொறுத்தவரை கமல் பெண் தானே, அதான் நடிக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று நினைப்பு காரணமாகத் தான் அவருடன் நடிக்காமலே இருந்தேன். ராஜ்கமல் நிறுவனம் ஒரு ஸ்டாரை ஒப்பந்தம் செய்வது போலத் தான் இப்படத்தில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரஹ்மானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாடகத்தில் நாயகனாக நடித்த மனுப் நாராயணன் இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.தசாவதாரம் பல்ராம் நாயுடு பாத்திரத்திற்கும் இதற்கும் தொடர்புண்டு. பல்ராம் நாயுடுவின் தனிவாழ்க்கை தான் இந்தப் படம்.இதில்,4 பாட்டு முடிவு பண்ணியிருக்கிறோம். அமெரிக்காவில் ‘டிஸ்ரிக்ட் 72 ‘என்ற குழுவினர் உள்ளனர். அவர்கள் இளையராஜாவோடு இப்படத்தில் இணைந்து பணியாற்றுவார்கள். வித்தியாசமான் ஒலி சேர்க்கை இருக்கும் என நம்புகிறோம். மெளலி, கிரேசி மோகன், சுதா, ஜெயமோகன் இப்படி என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே என் கதைகளை படித்துக் காட்டுவதுண்டு. தேவைப்பட்டால் அவர்களுடைய பங்களிப்பையும் ஏற்றுக் கொள்வேன்.இப்படத்தின் படபிடிப்பை வரும் மே 16-ம் தேதி அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தான் இந்தியாவில் படமாக்க இருக்கிறோம். நாங்கள் அமெரிக்க படப்பிடிப்பை ஜூன் இறுதியில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம்.
சென்னையில்,மீதி படப்பிடிப்பைஜூலையில் முடிக்க இருக்கிறோம்.அதே மாதிரி,மே 16-ந்தேதி நான் இங்கு இல்லை. என்னுடைய ஓட்டை யாராவது போட்டு விடுவார்கள். போனதடவை எனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். லிஸ்டில் என் பெயரே இல்லை என சொல்லி விட்டார்கள். நான் இன்னும் இந்திய பிரஜை தான் .தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் தான்.இம்முறையாவது ஓட் லிஸ்டில் என் பெயர் இருந்தால் , நானும் இங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வேன்.
நடிகர் சங்கம் தொடர்பான அஜித்,விஜய் விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்.அவர்கள் ஒதுங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதைப் பற்றி நான் பேசக் கூடாது. இது ஒரு குடும்பம். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை அதன் கதவு எப்போது ம் திறந்திருக்கும், அவர்கள் வரவுக்காக நடிகர் சங்கம்காத்திருக்கிறது.லைக்கா நிறுவனத்தினர் ‘மருதநாயகம்’ எங்களுக்கு தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு ஒரு படம் பண்ணலாம் என்று இதைப் பண்ணியிருக்கிறோம்.
எனக்கு ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.அதில் நான் தலையிட மாட்டேன் இவ்வாறு அவர் பேசினார்.