ஹைதராபாத்தில் ஷூட்டிங் காலை கட்டி வருகிறது.இரவில் ஊரடங்கு என்பதால் பகல்நேர படப்பிடிப்பு ராமோஜிராவ் நகரில் அமர்க்களமாக நடக்கிறது.
பெரும்பாலும் தமிழ்ப்படத்தயாரிப்பாளர்கள் அரங்குகளை முன் பதிவு செய்து வைத்துக்கொண்டு ஹைதராபாத் செல்ல தயாராகிவருகிறார்கள்.
விஷால் தன்னுடைய 31 ஆவது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் நகரின் பல பகுதிகளில் நடத்தி வருகிறார். இயக்குநர் சரவணன் .ஜூலைக்குள் மொத்த படமும் முடிந்துவிடும் என்கிறார்கள்.
கமல்ஹாசன் ,சூர்யா ,கார்த்தி ஆகிய மூவரும் அடுத்த வாரத்தில் ராமோஜி ராவ் நகரில் தங்களின் படங்களின் ஷூட்டிங்கை தொடங்குகிறார்கள்.
இந்தியாவில் மும்பை ,ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது.
அதனால் அங்கு பெருமளவில் தயாரிப்பாளர்கள் குவிந்து வருகிறார்கள்.