தமிழ்ச்சினிமாவில் வம்பு தும்பு இல்லாத படமேது ?
ஏதாவது சில்லறை சிக்கல் இல்லாமல் இருந்ததில்லை.அவ்வப்போது பஞ்சாயத்து கூடும். பொது விழாக்களில் ஒருவர் மீது மற்றவர் சேற்றை அள்ளி வீசுவார்கள்.பின்னர் கூடி விடுவார்கள். இம்மாதிரியான சிக்கலில் மாட்டியதுதான் “மகா”
காதல் முறிவுக்கு பின் சிம்பு – ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்துள்ள படமே ’மகா ’
“திரைப் படத்தின் எடிட்டிங் பணிகள் தனக்கு தெரியாமலேயே முடிந்துவிட்டது என்றும், படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டதாகவும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதால் அந்த சம்பள பாக்கியும் வரவில்லை” என்றும் இப்படத்தின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஹன்சிகாவின் 50 வது படம் என்பதால் அவரும் அப்செட் ஆகியிருந்தார்.பல கட்டங்களில் பஞ்சாயத்து நடந்தது.
இந்நிலையில்தான் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து சுமூக தீர்வை அடைந்துள்ளது
தற்போது நீதிமன்றம் ’மஹா’ படத்தை திரையிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது..
இதனையடுத்து சிம்பு, ஹன்சிகா நடித்த ’மஹா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.