துன்பமும் துயரும் தொடர்கதை ஆகிறதே!
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒருமாதமாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தொரட்டி பட நாயகனும், படத் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.
முதல் அலையின் போது பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தார்.
இந்நிலையில்,கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி படத்தில்கதாநாயகனாக நடித்திருந்த ஷமன் மித்ரு தற்போது கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்.