“இனிமேல் தென்னிந்திய மொழிகளில் வருகிற படங்களை ரீ மேக் செய்வதில்லை” என்கிற திட்டவட்டமான முடிவுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருப்பதாக சொல்கிறார்கள்.
மாஸ்டர் படத்தின் இந்தி ரீ மேக்கில் சல்மான் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் சல்மான் தரப்போ அந்த படத்தை அப்படியே எடுப்பதாக இல்லை என்கிறது.
சல்மானுக்கு மாஸ்டர் படத்தில் வருகிற ஜேடி கேரக்டர் மிகவும் பிடித்துப்போயிருந்தாலும் குடிகாரனாக சித்தரித்திருப்பது பிடிக்கவில்லையாம். இதுவரை அவர் குடிகாரனாக நடித்ததில்லை என்கிறார்கள். ஆகவே புதிய கதை,திரைக்கதையுடன் வரும்படி மாஸ்டர் ரீ மேக் குழுவினரிடம் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
இது மட்டுமல்ல இனி தென்னிந்திய மொழிப்படங்களின் இந்தி ரீ மேக்கில் நடிப்பதாக இல்லை என முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நல்ல முடிவு ராஜா!