தமிழ்,தெலுங்கு திரை உலகில் பெரிய தலைகளான தனுஷ் ,இயக்குநர் சேகர் கம்முலா ஆகிய இருவரும் இப்போது பேசு பொருளாகி இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்குக்கு செல்கிறார் தனுஷ். அவரது தமிழ்ப்படங்கள் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. தற்போதுதான் பல மொழிகளில் தனுஷின் படம் தயாராகிறது..120 கோடி பட்ஜெட் என்கிறார்கள் ஆந்திராவில்.!
தெலுங்கில் தனுஷுக்கு சம்பளம் 50 கோடியாம். தமிழ் ,இந்தி ஆகிய மொழிகளில் தனுஷுக்கு இருக்கிற மார்க்கெட்டை வைத்து இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.தனுஷுக்கு இன்டர்நேஷனல் மார்க்கெட் இருக்கிறது என்கிறார்கள்.