“எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படம் “அழகிய கண்ணே”.
இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.இதில்,புதுமுகம் லியோ சிவக்குமார் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் ,பாடகர் , இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் . இப்பாடல் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் பாடலாக அமையும் என்கிறார் இயக்குநர் விஜயகுமார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ.ஆர்.அசோக்குமார் கவனித்து வருகிறார்.