இருவருமே தமிழ்த்திரைப்பட உலகில் பிரபலமானவர்கள்.
லிங்குசாமி ,ஞானவேல் ராஜா இருவருமே வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள்தான்.!
தற்போது இவர்கள் இருவரும் கொடுக்கல்-வாங்கல் பிரச்னையினால் முட்டி ,மோதிக் கொண்டு நிற்கிறார்கள். ஆந்திரா வரை பிரச்னை போய் இருக்கிறது.
லிங்குசாமி வெற்றிப்படங்களை தந்திருந்தாலும் தோல்விகளையும் தொடர்ச்சியாக சந்திக்க வேண்டியதாகிவிட்டது.
இந்த நிலையில்தான் தெலுங்கு பட ஹீரோ ராமுக்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருந்தார்.
படப்பிடிப்புத்தளத்துக்குப் போக வேண்டிய நிலையில் புகாருடன் ஆந்திராவுக்கு சென்று விட்டார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
பிலிம் சேம்பரில் புகாரும் கொடுத்து விட்டார்.
“லிங்குசாமியிடம் இருந்தது தனக்கு வரவேண்டிய பாக்கி பணம் செட்டில் ஆகும்வரை அவர் கலந்து கொள்கிற படப்பிடிப்பு நிறுத்தப்படவேண்டும் ” என புகாரில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்புடைய யூனியன்களிடமும் ஞானவேல் ராஜா புகார் செய்திருக்கிறார்.