பாலிவுட் நடிகை பாயல் ரோக்டகியை தெரியுமா?
முன்னாள் பிரதமர் நேருவைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியதால் ராஜஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டு கவனிக்கப்பட்ட நடிகை.
தற்போது அகமதாபாத் போலீசால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் வைக்கப்பட்டிருக்கிறார்.
எதற்காக ? எல்லாம் வாய்தான்.!
ஹவுசிங் சொசைட்டி தலைவரை மிரட்டியதுடன் தரக்குறைவாக வாட்ஸ் ஆப்பில் விமர்சனமும் செய்திருக்கிறார்.
ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பாயல் கலந்து கொண்டிருக்கிறார். இவர் உறுப்பினரும் இல்லை. கலந்து கொண்டதுடன் நில்லாமல் சொசைட்டி உறுப்பினர்களை மானாவாரியாக பேசியிருக்கிறார்.
இதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் “கொன்று விடுவேன் “என்று தலைவரை மிரட்டியும் இருக்கிறார். இதானால் சொசைட்டி உறுப்பினர் புகாரின் பேரில் பயலை கைது செய்து கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள்.