காஜலுக்கு தற்போது 36 வயதாகிவிட்டது.பொதுவாக பருவம் வந்த பெண்கள் 40 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது நியதி.
அண்மையில்தான் காஜல் அகர்வால் தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.2 கோடி சம்பளத்தில் புதிய படம் ‘கமிட் ‘ ஆகி இருக்கிறார்.
இந்த தருணத்தில்தான் காஜலின் தங்கை நிஷா அக்காவுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் .கோரிக்கை என்பதை விட வலியுறுத்தல் என்பதாக சொல்லலாம்.
“காஜல் சீக்கிரத்தில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வாள் என்று நம்புகிறேன்.இதில் எனது சுயநலமும் இருக்கிறது. எனது சகோதரிக்கு கல்யாணம் நடந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக சொல்லியிருக்கிறேன். குழந்தை பெற்றுக்கொள்வதை அவர்கள் தள்ளிப்போட்டால் என்னுடைய மகனுக்கும் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் வயது வித்தியாசம் அதிகமாகி விடும். இப்போதே என்னுடைய மகனுக்கு 3 வயதாகிவிட்டது.ஆகவே காஜல் அகர்வால் சீக்கிரத்தில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார் தங்கை நிஷா அகர்வால்.!
ஒரு வகையில் இந்தியன் படக்குழுவுக்கு பிரச்னைதான்!