மன்மதன்,வல்லவன், சிலம்பாட்டம், வானம் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன .யுவன் சங்கர் ராஜா – சிலம்பரசன் ஆகியோர் இந்த படங்களில் இணைந்திருந்தார்கள் .
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்திருக்கிற மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர்ராஜா தான் இசை.
இப்படத்தின் முதல் பாடல் ‘மெஹ்ரசைலா’ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ள புதிய இசை ஆல்பத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகர் எஸ்.டி.ஆர் பாடியுள்ளார். இதற்கான பாடல் காட்சியில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார்.