‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியிருக்கிறது.
விஜய் -பூஜா ஹெக்டே நடிக்கிற இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார்.
விஜய் -சன் பிக்சர்ஸ் இணைகிற படம் என்றால் அது கண்டிப்பாக பெரிய பட்ஜெட்டாகத்தான் இருக்கும். இந்த படத்தில் நடிப்பதற்காக பூஜா 5 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பாக இன்று தனியார் படப்பிடிப்பு அரங்கில் நடந்து கொண்டிருக்கிறது.
பீஸ்ட் (மிருகம் ) என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டிருக்கிற படத்தின் கதை எதை நோக்கி நகரும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது.
பூஜா ஹெக்டே அண்மையில் இந்த படத்துக்கான பாடலுக்காக பயிற்சி படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை கிளப்பப் பார்த்தார்கள். அந்த பாடலுக்கான காட்சிதான் தற்போது படமாக்கப்படுகிறதாம்.