எப்படி ஜெயலலிதா அமைச்சர்களையும் ,தலைவர்களையும் அடிபணிய வைத்தாரோ ,அதே பாணியை தலைவியாக நடித்த நடிகை கங்கனா ரனாவத்தும் பின்பற்ற நினைக்கிறார் போலும்.!
யாரையும் எடுத்தெறிந்து பேசுவது அவரது இயல்போ என்னவோ?
தற்போது டாப்ஸியை ‘பி’ கிரேடு நடிகை என்பதாக சொல்லியிருக்கிறார்.
கங்கனாவுக்கும் டாப்சிக்கும் முட்டல் கடுமையாகியிருக்கிறது.
“எனது வாழ்க்கையில் கங்கானாவுக்கு எந்த தொடர்பும் சம்பந்தமும் இல்லை.” என்பதாக டாப்ஸி சொல்லியிருக்கிறார்.
கங்கனா என்ன சொல்லுகிறார்.?
“டாப்ஸி பி கிரேடு நடிகை.! என்னுடைய பெயரை பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் அடைய நினைக்கிறார்கள்.தயாரிப்பாளர்களிடம் கெஞ்சி ,கூத்தாடி என்னுடைய பெயரை சொல்லி அவர்களுக்கு சான்ஸ் பெறுகிறார்கள்.எனது பெயரை சொல்லாமல் டாப்ஸியினால் முன்னுக்கு வர முடியுமா?எனது பெயரால் அவர்கள் விளம்பரம் பெறுகிறார்கள்.கவலை இல்லை” என்கிறார் .