சம்பிரதாயங்களை உடைத்தெறிந்த நடிகை மந்திரா பேடி .
இவரது கணவர் ராஜ் கவுசல் .( வயது 49.) பிரபலமான தயாரிப்பாளர்.
மாரடைப்பினால் இறந்து விட்டார். இவர்களுக்கு வீர் என்றொரு மகன் இருக்கிறார். ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்..
கணவனின் திடீர் மறைவினால் மிகவும் மனமுடைந்து போய் விட்டார் மந்திரா.
இறுதிச்சடங்கில் திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
வழக்கமாக ஆண்கள் மட்டுமே சுடுகாட்டுக்கு செல்வார்கள் .பிணத்தை சுமப்பதும் ஆண்கள்தான்.
ஆனால் இந்த சம்பிரதாயங்களை மந்திரா உடைத்து எறிந்து விட்டார்.
கணவனின் பிரிவை தாங்க இயலாத மந்திரா பாடையை தாங்கி சென்றார். கொள்ளிச்சட்டியை சுமந்தார்.கடைசி சடங்குகளிலும் கலந்து கொண்டு கணவனை தீக்கு தாரை வார்த்து தந்து விட்டார்.