ஊரே ஒரு வழியில் செல்லும்போது தான் மட்டும் தனி வழியில் போனால் சரியாகுமா என்று நினைத்தாரோ என்னவோ ,அக்ஷ்ரா ஹாசனும் கவர்ச்சிக் கடையை திறந்து வைத்து விட்டார்.
விவேகம்,கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து,உலகநாயகனின் இளைய வாரிசு அக்சராஹாசன்,தற்போது நவீன் இயக்கத்தில்,விஜய் ஆண்டனி, அருண் விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள்,மற்றும் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் அக்ஷரா ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில், பிரபல பாடகி உஷா உதுப், அக்ஷரா ஹாசனுக்குப் பாட்டியாக நடித்துள்ளார். இந்நிலையில்,நடிப்பில் மட்டுமல்லாமல் கிளாமரிலும் தனது அக்கா ஸ்ருதிஹாசனுக்கு கொஞ்சமும் சளைத்தவள் அல்ல என கருப்பு உடை அணிந்து உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேஸருடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.இப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.