பங்கு சந்தை ( ஸ்டாக் மார்க்கெட்.) என்பது உலகளாவிய முதலீட்டு வணிகமாகும். ஒருவரை உயர்த்துவதும் தாழ்த்துவதும் அவரவர் விதி என சொல்வது இந்த வணிகத்துக்கு பொருந்தும்.
அமெரிக்கா, நியூ ஜெர்சியில் தொடங்கப்படுகிற இன்டர்நேஷனல் மீடியா அகுஷிசன் கார்ப்பரேஷன் அமைப்புக்கு அமெரிக்க அனுமதி கிடைத்திருக்கிறது. 230 மில்லியன் அமெரிக்க டாலர் ,அதாவது 1790 கோடி ரூபாய் திரட்டலாம் .
இந்த அமைப்பில் போர்டு மெம்பராக சஞ்சய் வாத்வா இருக்கிறார். இவர் தமிழ்த் திரை உலகில் பெரும்பான்மையான திரைப்படங்களின் உரிமையை வாங்குகிற மிகப்பெரிய வியாபாரி.
இந்த அமெரிக்க வணிகத்தில் இயக்குநர் மணிரத்னம் ,ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் ஆகியோர் பெரும் அளவில் முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்களைத்தவிர பி.வி.எஸ்.என் .பிரசாத் ,தி.ஜி.விஸ்வ பிரசாத் ,ரோகித் ஷெட்டி .நீரஜ் பாண்டே ,இமிதாஜ் அலி ,அஜய் தேவ்கன் வித்யுத் ஜமால் போன்ற திரை உலக பிரபலங்களும் முதலீடு செய்துள்ளனர்.