ஆந்திராவின் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தமிழ் முகங்கள் என்றால் அது சூர்யா-கார்த்தி சகோதரர்கள்தான்.! இருவரில் கார்த்திக்கு அண்ணனை விட சற்று செல்வாக்கு அதிகம்.!
அஜித் ,விஜய் இவர்கள் முயற்சிக்கவே இல்லை. ஆனால் இவர்களைத் தவிர சிலம்பரசன் ,சிவகார்த்திகேயன் ,ஜீவா ,ஆகியோர் முயன்று பார்த்தார்கள்.
நேரடி தெலுங்குப் படத் தயாரிப்புக்கு ஆந்திரா பட உலகம் தயாராகவில்லை.
இந்த நிலையில்தான் ஆந்திரப்படத்தயாரிப்பு நிறுவனங்கள் தனுஷை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளன. இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளன !
காரணம் என்ன?
தெலுங்குப்படஉலகத்தினருக்கு தனுஷ் மீது திடீர் காதல் பிறந்ததற்கான அடிப்படை எதுவாக இருக்கும்?
ஆதாயமில்லாமல் யாராவது ஆற்றோடு போவார்களா,?
தங்களிடம் சூப்பர்ஸ்டார்கள் ,கமர்ஷியல் நடிகர்கள் இருக்கிறபோது ஆந்திராவுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத தனுஷை இறக்குமதி செய்வது எதற்காக ?
தெலுங்கில் கால் பாதிக்கவேண்டும் என்கிற ஆசை தனுஷுக்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழ்,இந்தி ஹாலிவுட் என்று அவரது ரேன்ஜ் பறந்து விரிந்தே காணப்படுகிறது.
பிறகு எதற்கு அவர்க்கு தெலுங்கு முத்திரை?
அங்கேதான் ஆந்திராவின் காரம் தெரிகிறது?.
தன் மீது சிலர் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள் ,அடக்கியாள நினைக்கிறார்கள் என்றால் அவர்களை மடக்க அடுத்த மாநிலத்து ஆளை கொண்டு வந்து இறக்கு என்பது ஆந்திர தயாரிப்பு நிறுவனங்களின் தந்திரம்.!
இதுவே தனுஷின் தெலுங்கு திக்விஜயத்துக்கான முகாந்திரம் !
சில தெலுங்கு கதாநாயகர்களை அடக்குவதற்கான ஆயுதமே தனுஷ் என்கிறார்கள் தெலுங்கு தேசத்தில்!
டோலிவுட்டின் எல்லா கதாநாயகர்களுமே சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்கள் ,பிளாப் நாயகர்கள் உள்பட.!
அண்மைக்காலமாக மகேஷ்பாபு ,பவன்கல்யாண் ,ரவி தேஜா ஆகியவர்களின் பெயர்கள் மட்டுமே பிரபலமாக தெரிகின்றன. இவர்கள் அதிகமாக பேசப்பட்டனர் .இவர்கள் மட்டுமில்லாமல் மேலும் சிலர் தங்களின் ஊதியத்தை உயர்த்திவிட்டனர். தங்களை விட்டால் ஆந்திராவில் வேறு நடிகர்கள் யாருமே இல்லை என்கிற மனப்பான்மை வந்து விட்டது என தயாரிப்பு நிறுவனங்கள் நினைக்கின்றன.
ஆகவே இவர்களுக்கு ‘செக் ‘வைக்கவேண்டும் என்பதற்காகவே தனுஷை கொண்டு வருகிறார்கள் என்கிறார்கள் ஆந்திரத்தின் வித்தை தெரிந்த சில வித்தகர்கள்.!
தனுஷின் பிரவேசம் எவர்களது மார்க்கெட்டை முடக்கிப்போடப்போகிறது என்பது பின்னர்தான் தெரியவரும்?
.