15 வருஷ காதல்யா !
15 ஆண்டுகளாக தன்னுடைய காதலனை கழுத்திலேயே சுமந்திருக்கிறார்யா ‘ஒரு காதல் செய்வீர் ‘பட நடிகை ! சஞ்சனா கல்ரானி .இவர் நிக்கி கல்ராணியின் உடன் பிறப்பு.!
சஞ்சனா கல்ரானி கன்னட மாநிலத்தில் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு டாக்டரை ரகசியமாக காதலித்து வந்திருக்கிறார்.
இது எப்படி கிசுகிசுக்களில் மாட்டாமல் தப்பியிருக்கிறது?
ஸ்ரேயா ,காஜல் ,பிரணீதா ஆகிய நடிகைகளும் தங்களின் காதலை கமுக்கமாக காப்பாற்றி வந்தவர்கள்தான்.!
அண்மையில்தான் தன்னுடைய 15 ஆண்டு கால காதலரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் பெயர் அஜீஸ் .டாக்டர் .இசுலாமியர்.
கல்யாணம் முடிந்த பின்னர்தான் தங்களுடைய படங்களை வெளியிட்டார் சஞ்சனா .
எப்படி இவரால் காதலை மறைத்து வாழ முடிந்தது?
“என்னுடைய கழுத்தின் பின் பக்கத்தில் அவரின் பெயரை பச்சை குத்திக்கொண்டு விட்டேன். மேலும் மீடியாக்காரர்களை என்னுடைய சகோதரர்களாகவே கருதினேன். அரசியல்வாதியையோ ,அல்லது கிரிக்கெட் வீரரையோ சந்தித்தால் அவர்களை இணைத்து சிலர் எழுதி வந்தார்கள்” என்கிறார் சஞ்சனா கல்ரானி .