புதியன புகுதலும் ,பழையன கழிதலும் என்பது தமிழ் வழக்கு சொல்.
ஒருவர் நீங்குகிறார் அல்லது நீக்கப்படுகிறார் என்றால் அந்த இடத்துக்கு இன்னொருவர் வந்தாக வேண்டும் .இல்லையெனில் அந்த செயல் முழுமை பெறாது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிய படம் ‘சாணிக் காயிதம்’.
செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். செல்வராகவன் நடிகராக நடித்திருக்கிற முதல் படமாகும்.
ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்திருக்கிற இந்த படத்தில் இசை அமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் இசை அமைக்கவில்லை. சாம்,சி.எஸ். இசை அமைக்கிறார் என்கிறார்கள்.
காரணம் என்னவாம்?
சம்பள பிரச்னை என்கிறார்கள். கேட்ட சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் தர மறுப்பதால் யுவன் விலகிக்கொண்டார் என்கிறார்கள். சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!
ஆட்டோ கிடைக்கலேன்னா பஸ்ல ஏறிட்டுப் போறோம்!