“ஏம்பா ,நீங்க பாட்டுக்கு அவனோடு டேட்டிங் இவனோடு டேட்டிங்ன்னு எழுதிட்டா அதெல்லாம் உண்மை ஆகிடுமா? நான் எவனோடும் டேட்டிங்க்ல இல்ல.”என்கிறார் டாப்ஸி.
முன்னாள் பேட்மிண்டன் ஆட்டக்காரர் மத்தியாஸ் என்பவருடன் டேட்டிங்கில் இருக்கிறார் ,அவருடன்தான் டாப்ஸிக்கு திருமணம் என்கிறது ஊடகங்கள்.!
அதற்குத்தான் இந்த ஆப்பு!
“எங்கம்மா ,அப்பா சம்மதம் இல்லாம நான் யாரையும் கைப் பிடிக்கப் போறதில்ல. அவங்களுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கணும் .!டைம் பாஸ் பண்றதுக்காக ஒரு ஆளுடன் ஸ்பென்ட் பண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை.!எங்கே நான் கல்யாணம் பண்ணாமலேயே இருந்திடுவேனோன்னு என்னுடைய பேரெண்ட்ஸ் கவலைப்படுறாங்க.
இன்னும் நான் என்னுடைய பெஞ்ச் மார்க்ன்னு சொல்லுமளவுக்கு படம் பண்ணல. அதை சாதிக்கணும்.அதன் பிறகுதான் சொந்த வாழ்க்கையை தீர்மானிக்கனும்” என்கிறார் டாப்ஸி!
முருங்கக்காய் முத்தினா கொளம்பு ருசிக்காதும்மா!