பாபநாசம் ,தர்பார் ,ஜில்லா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ். தெலுங்கு படங்களில் பேமஸ். அதிக அளவில் படங்கள் அந்த மொழியில்தான்.!
திறமையான நடிகை. திறமைக்கும் குறைவில்லை.அழகாகவும் இருக்கிறார். இளமையாகவும் இருக்கிறார். அப்புறம் என்ன கவர்ச்சியாக நடித்தால் என்ன ?
உடம்பு காட்டி நடிக்க வேண்டும் என்பது ஆந்திர தயாரிப்பாளர்களின் ஆசையாக இருக்கிறது.
இதனால் நிவேதா தாமஸுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. வக்கீல் சாப் என்கிற படத்திற்குப் பிறகு அவ்வளவாக படங்கள் இல்லை.
“கவர்ச்சியாக ,உடல் காட்டி நடிக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறியதுதான் காரணம்.
தற்போது கொரியன் படமான ‘மிட்-நைட் ‘டின் ரீமேக் ‘ஷகினி -தகினி ‘ யில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.