சீயான் விக்ரமுடன் நடிகர் சூர்யா பிதாமகன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தபோதிலும் இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை சூர்யா மறுத்துள்ளார்.
சூர்யாவிடம், விக்ரமுடன் கருத்துவேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் இயக்கிய(Spirit of Chennai)’ குறும்படத்தில்எப்படி நடித்தீர்கள்? என்று கேட்டபோது, சூர்யா,’நானும் விக்ரமும் ஒருவருக்கொருவர் மரியாதையை பரிமாறி கொள்வோம். எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.மோதலும் இல்லை! ‘ஐ’ படத்தின் வெளியீட்டின் போது கூட நான் அவருக்கு மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்து கூறினேன். எங்களிடையே நிலவி வரும் நட்பின் அடிப்படையிலேயே விக்ரமின் குறும்படத்தில் நான் நடித்தேன் நான் மட்டுமல்ல , அந்த குறும்படத்தில் நடித்த கோலிவுட் நடிகர், நடிகைகள் அனைவருமே பெருமைக்குரியவர்கள் தான் ‘ என்கிறார்..