கைதி,சுல்தான் படங்களைத் தொடர்ந்து,நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.பி எஸ் மித்ரன் இயக்கி வரும் இப்பட த்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகிகளாக ராக்ஷி கன்னா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். த்ரில்லர் படமான இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவற்றில் ஒரு கேரக்டரில் கார்த்தி போலீசாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 16ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.