விஷால் மிகவும் பிடிவாதக்காரர்.
“நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான் எனது கல்யாணம் நடக்கும்” என்று சபதம் செய்தார்.
“அது நடக்காது மகனே.! “கட்டிடம் முழுமையடையாதபடி முட்டுக்கட்டைகளை போட்டு இருக்கிறார் டாக்டர் ஐசரி கணேஷ்.
திருமணவிஷயத்தில்தான் இப்படி என்றால் நடிக்கிற படங்களிலுமா சிக்கல் சிங்காரம் விளையாடுவார்?
ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் புதிய படம் எனிமி.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் .எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார் என்பதாக சேதி சொன்னார்கள்.
வினோத் தயாரித்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. ஆனால் சீராக நடக்காமல் இடைவெளிகளை கடந்து பயணித்தது படம்.!
அப்பாடா ! ஒரு வழியாக ஜூலை 12 ஆம் தேதி நிறைவுற்றதாகப் படக்குழு அறிவித்தது.
பிறகென்ன? அங்கேதான் ஆண்டவரே, சிக்கல் சிங்காரம் விதியை முடுக்கிவிட்டிருக்கிறான்!
படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருந்தாலும் இசையமைப்பாளர் தமன் படத்திலிருந்து பை …பை சொல்லிவிட்டு ஆர்மோனிய பெட்டியோடு கிளம்பி விட்டாராம்.
“நீங்க சொன்னபடி டைமுக்கு பாடல்களைத்தரல .அப்புறம் எப்படி இசை அமைக்கிறது? இப்ப வந்து “அவசரம் ,சீக்கிரமாக சாங்க்ஸை கொடுன்னா நான் எங்கேர்ந்து அவுத்துக் கொடுக்கிறது? உங்க அவசரத்துக்கெல்லாம் பிள்ளை பெத்துக்க முடியாதுப்பா” என்று சொல்லி விட்டு தமன் வெளியேறி விட்டதாக சொல்கிறார்கள்.
அண்ணன் தமன் விட்ட வேலையை இப்ப தம்பி சாம்.சி.எஸ்.செய்து வருவதாக கேள்வி.
எதுக்கும் ஒரு தடவை விஷால் திருநள்ளாறு போயிட்டு வந்தால் நல்லது.!