“ஏம்மா ,நண்பரோட என்னம்மா சண்டை? பிரபாஷுடன் நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டியாமே ,என்னம்மா ஆச்சு?”என்று அனுஷ்காவிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஷுடன் நடிப்பதற்காக அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள்.
கதையை கேட்டிருக்கிறார் மேடம். இங்கேதான் தடைக்கல்! குண்டாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதின் பலனை அனுபவித்து வருகிறவருக்கு இந்த படத்தின் கதையைக் கேட்டதும் ஷாக் .
“முடியாது” என்று மறுத்து விட்டார். பிரபாஷுடன் லீவ்-இன் -ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிற நண்பருடன் ஏன் நடிக்க மாட்டேன் என்று சொன்னார்?
“நாற்பது வயது பெண் 20 வயது இளைஞனை காதலிக்கிற கதை”
முடியாது என்று சொன்னது நியாயம்தான்!
அந்தம்மாவுக்கு வயதாகிவிட்டது என்பதை இப்படியா குத்திக்காட்ட வேண்டும்?