சண்டைகள் இல்லேன்னா அது சங்கமே இல்லை போலும்.!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சண்டை நடந்ததால் கட்டிடம் பாதியில் நிற்கிறது. நிர்வாகமும் அரசாங்கத்தின் கையில் ! எந்த விதமான திட்டமும் போட முடியாத நிலையில் இருக்கிறது.
ஆந்திராவில் நடிகர் சங்கத்துக்கான ( மா ) தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே ஒருவர்க்கொருவர் முகத்தில் குத்து விடுகிறார்கள். சாணியோ ,சகதியோ ,கையில் எது மாட்டுகிறதோ அதை எடுத்து வீசிக்கொள்கிறார்கள்.
இப்போது என்.டி .ஆர் .பாலகிருஷ்ணா எதிரணியான பிரகாஷ் ராஜ் .சிரஞ்சீவி ஆகியோரை விட்டு விளாசியிருக்கிறார் .
சிரஞ்சீவி அணி மீது அக்கினி குண்டு வீசி இருக்கிறார்.
“மா கட்டிட நிதி திரட்டுவதற்காக வெளிநாடு போனியே ,எங்கேய்யா பணம் ,கணக்கு காட்டு? சிரஞ்சீவியும் இன்னும் சிலரும் அமெரிக்காவுக்கு பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் சொகுசுப் பயணம் போனாங்க, நிதி திரட்டுறதா சொன்னாங்க. அந்த பணம் என்னாச்சு?
மா சங்க கட்டிடத்துக்காக அரசாங்கத்திடம் இலவசமா இடம் வாங்க துப்பில்ல .எலக்சன்ல நிக்கிறாங்க. !
சங்கத்துக்காக இடம் கொடுத்து கட்டிடம் கட்டுனா என் சப்போர்ட் மஞ்சு விஷ்ணுவுக்குத்தான் !நான் பிரகாஷ் ராஜ் ,சிரஞ்சீவி அணிகளை எதிர்க்குறேன்யா.வா வந்து பாரு” என்று தொடை தட்டுகிறார் பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படுகிற பால கிருஷ்ணா .