’24’ movie review
“24”, வித்தியாசமான டைட்டிலில் வெளியாகியுள்ள படம்.ஆனால் காட்சிக்கு காட்சி செம சுவாரஸ்யம். “சேதுராமன்” என்ற விஞ்ஞானி அரிய “காலச்சக்கரம் ”time mission” ஒன்றை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி மேற்கொள்கிறார்.ஆனால்,. அம் முயற்சி பல தடவை தோற்றுப்போக, மனம் தளராமல் ஆராய்ச்சியை தொடர வெற்றியும் பெறுகிறார் என்ற காட்சியுடன் படம் தொடங்குகிறது., கூடவே பல நிமிடங்கள் இடைவெளி விட்டு பிறந்த சகோதரன் “ஆத்ரேயா” அரிய கண்டுபிடிப்பான கடிகாரத்தை களவாட வருவது, (புது ஸ்டைல் கொஞ்சம் நடிகர்திலகம் சிவாஜி சாயல், சூரியாவின் ராயல் கிளாஸ் வில்லத்தனம்) என்று இன்னொரு சூர்யா அங்கே ஆவல் பற்றிக்கொள்கிறது. நித்யா மேனன் அன்பான மனைவி, கொஞ்ச நேரமே வந்தாலும் கண் கொட்டவைக்கிறார். “கழுகு” ஒன்று செய்யும் விஷயத்தில் வில்லன் காயம்பட, தப்பிக்கும் சேது, ஓடுகிற ரயிலில் மகனை காப்பாற்றி விட்டு உயிரைவிட, கோபத்தில் வில்லன் ஆத்ரேயா விபத்தில் கோமா’ நிலைக்கு போக வழக்கமான(ரொம்ப நாளாச்சு) 26 ஆண்டுகளுக்கு பிறகு என்ற டைட்டிலுடன் படம் மீண்டும் தொடங்குகிறது., மகன் சூர்யா கடிகாரம் ரிப்பேர் செய்கிற கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கேரக்டர் பெயர்
மணி, இப்படி பல விஷயங்களை டைரக்டர் சரியாக சேர்த்துள்ளார். சுவிட்ச் ஷாக் அடிப்பது, பொக்கிஷமான வாட்ச் பெட்டியை, சேரின் பேலன்ஸ் சரியச் செய்ய பயன்படுத்துவது என கல கல காட்சிகள். சமந்தா அறிமுக காட்சியில் அவங்க குடும்பத்தினர் மௌனவிரதம் இருக்கின்ற விவரம் சூப்பர். அந்த காரணத்தை கிளைமாக்ஸ் முன்பு, சரண்யா கேரக்டருடன் சேர்ப்பது அருமை. சமந்தாவை பார்த்ததும் லவ், அந்த காதலை ஈடேற வைக்க மணி செய்யும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. கடிகாரத்தின் பவரை அறியாத மணி(சூர்யா) டைம் மிஷின் குறித்து அறிந்தபிறகு ஆச்சர்யப்பட்டு சோதனை போடும் காட்சிகள் யதார்த்தமாக படமாக்கப்பட்ட விதம் அருமை.
அடுத்த காட்சி என்ன வரும் என்பதை யூகித்து பார்தால் ஏமாற்றமே, டைரக்டர் விக்ரம் குமார் திரைக்கதை வசனங்களில் விளையாடியுள்ளார். கடிகாரத்துக்காக மீண்டு(ம்) வரும் ஆத்ரேயா அசத்திவிட்டார். சமந்தா சூர்யா காதல் பகுதி காட்சிகள் செம கல கல, சத்யன், சுதாம்மா, கிரிஷ்கர்னாட் இவர்கள் நடிப்பு அருமை. “ஆற்றல்” பாடல் பிரமாதம். இசையில் ஏ.ஆர்.ரகுமான் வியக்கவைக்கிறார். ஒளிப்பதிவு அருமை, ஒளிப்பதிவாளர் திரு’வுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். புதுவடிவான கதை, காட்சி ரசிக்க வைக்கிற இயக்கம் என விகரம் குமார் அசத்திவிட்டார். அரங்க அமைப்பு, அபாரம். கலை மற்றும் அனிமேஷனுக்கு கூடுதல் பாராட்டுக்கள். அதிக பொருட்செலவில் உயர்ந்த தரமான படத்தை தயாரித்த சூர்யா அவர்களுக்கு பாராட்டுக்கள். வில்லனாக வரும் ஆத்ரேயா ஸ்கோர்களை அள்ளப்போவது உறுதி. “அரசியே” பாடலில் சூர்யா அழகோ அழகு. கதைகளில் ஆங்காங்கே லாகிக் எல்லை மீறல்கள் அதிகமாக இருந்தாலும் மொத்தத்தில் சூர்யா மீண்டும் விட்ட இடத்தை பிடித்திருக்கிறார் விக்ரம் குமார் உதவியால்!