2015-ல் ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில்வெளியாகி தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், ‘இன்று நேற்று நாளை’.
இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் அயலான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் ராகுல் ப்ரீத்சிங், இஷா கோபிகர்,யோகிபாபு,கருணாகரன்,பா
இந்நிலையில் அயலான் படப்பிடிப்பின் போது தனது உதவி இயக்குனர் ஒருவருக்காக ஷூட்டிங் லொகேஷனையே மாற்றிய சம்பவத்தை இயக்குநர் ரவிகுமார் தனது முகநூலில் குறிப்பிட்டு நெகிழ வைத்துள்ளார்.
அப்பதிவில் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளதாவது,
“எனது இயக்குனர் குழுவின் மிக முக்கியமானவன் நாகேந்திரன். கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு மேலாக என்னுடன் பயணித்து வருகிறான், அயலான் திரைப்படத்தில் அவனது பணி அளப்பரியது. ரொம்பவும் புதுமையை விரும்புபவன்.
மனிதாபிமானத்திலும் அதை தாண்டி இயற்கையின் மீதும் பற்றுள்ளவன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு மரத்தையும் செடியை வெட்டிவிடக்கூடாது என்று கவனமாக இருப்பான்.
இவனுக்காகவே நான் லொக்கேசனை மாத்தியிருக்கிறேன். இன்னும் ஒரு படி மேலே போய் நச்சுபுகையால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் என்று வாகனத்தையும் தவிர்த்துவருகிறான். கூடிய சீக்கிரமே மிகச்சிறந்த இயக்குநராக வெளிப்படுவான் அதற்கு முன்னோட்டமாக தனது முதல் குறும்படத்தை இயக்கியிருக்கிறான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்