சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் சர்ச்சை நடிகை வனிதா. வணிக ரீதியாக எந்த படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை மற்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது.இந்நிலையில், வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கரன்சி மாலை அணிந்து குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அவரது மகள் ஜோவிகாவும் கரன்சி மாலை அணிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குபேரபூஜை குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.