நடிகை குஷ்புவின் டிவிட்டர் பக்கத்தை யாரோ சிலர் முடக்கி இருக்கிறார்கள்.
இவர் தற்போது பாஜக.வில் முக்கிய பிரமுகர். அதிகாரத்தில் இருக்கிற பாஜக தலைவர்கள் அவர்களின் கருத்துகளை சொன்னாலோ ,அல்லது சமூக வலை தளங்களில் பதிவு செய்தாலோ அவ்வளவாக ஈர்ப்பதில்லை .எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால் குஷ்பூவின் கருத்துகளுக்கு நிச்சயம் எதிர்வினைகள் ஏற்படும்.
அதனால்தானோ என்னவோ அவரது டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்திருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இன்று (ஜூலை 20) காலை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது .
அவருடைய முகப்பு படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, அவரது அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், குஷ்புவின் பெயரையும் மாற்றியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் முடக்கம் தொடர்பாக குஷ்பு கூறியதாவது ,“இது எனக்கு விடப்பட்ட மிரட்டலாகவே பார்க்கிறேன்.
இதை யாரோ வேண்டும் என்றே செய்திருக்கிறார்கள் எனது பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது.இதை நான் சும்மா விடப்போவதில்லை.
இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் செய்துள்ளேன். சைபர் கிரைம் பிரிவிலும் இது குறித்து புகார் கொடுக்க உள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.