இரண்டாம் தாரமாகப் போவது ஒரு வகையில் நரக வாழ்க்கைதான்.!
முதல் மனைவிக்கு துரோகம்; இருவருமே செய்கிறார்கள்.
அந்த வாழ்க்கையில் ‘சுகமும்’ இருப்பதில்லை. ஒரு ஆள் சுவைத்ததை இன்னொரு ஆள் எடுத்து சுவைப்பது ருசியல்ல.முதலில் சுவைத்தவனின் அல்லது சுவைத்தவளின் எச்சிலையும் சேர்த்து சுவைப்பது மாதிரிதானே அந்த செயல்.?
இன்னொருத்தரின் சாபமும் சேர்ந்து கொள்ள ,அத்தகைய செகண்ட் ஹாண்ட் லைஃப் தேவைதானா ?
ஆனால் திரை உலகில் இரண்டாம் திருமணம் என்பது சாதாரணம்.அவர்களின் ஆடம்பர வாழ்வின் நாகரீகம்.!!
இதோ நடிகை பிரியாமணியின் மண வாழ்க்கையில் பிரச்சனை முளை விட்டிருக்கிறது.
2017 -ல் முஸ்தபாராஜ் என்கிற இசுலாமியரை நடிகை பிரியா மணி காதலித்து திருமணம் செய்தார்.
அந்த திருமணம் செல்லாது என்று நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
முதல் மனைவி ஆயிஷா தன்னுடைய கணவர் முஸ்தபா மீது வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். பிரியாமணியை முஸ்தபா திருமணம் செய்தது செல்லாது .நாங்கள் டைவர்ஸ் செய்யாத நிலையில் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .என் கணவரை எப்படி மணமாகாதவர் என்பதாக சொல்ல முடியும்?
தன்னுடைய கணவர் முஸ்தபா என்னை துன்புறுத்தினார் என்பதாக மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முஸ்தபாவின் பதில் என்ன?
“பிள்ளைகளின் நலனுக்காக நான் முறையாக பணம் கொடுத்து வருகிறேன். நாங்கள் 2010 -லிருந்தே தனித்து வாழ்ந்து வந்தோம். ஆயிஷா என்னிடமிருந்து பணம் பிரிக்கவேண்டும் என்பதற்காக அப்படி ஒரு வழக்குப் போட்டிருக்கிறார். 2017-ல்தான் பிரியாமணியை கல்யாணம் செய்தேன் .4 வருடங்கள் சும்மா இருந்து விட்டு இப்போது வழக்குப் போடுவது ஏன்” என்று கேட்கிறார்.
நீதி மன்றத்தின் கைகளில் முடிவு இருக்கிறது?