நடிகர் சூர்யா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 40வது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று சூர்யா தயாரிக்கிற படத்தின் பெயர் மற்றும் முதல் போஸ்டர் இன்று வெளியாகியது.
படத்தில் தலைப்பு ‘ஜெய் பீம்’ !
டாக்டர் அண்ணல் அம்பேத்கரை நினைவு படுத்துகிற பெயர்.
முழக்கம்.சிறுபான்மையினரின் உணர்வு முழக்கம் !
இதையே தலைப்பாக வைத்திருப்பதால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு குழுவினர்க்கு அதிருப்தியைத் தரலாம். இந்த படத்தில் சிறுபான்மையினருக்கு ,ஒடுக்கப்பட்ட இனத்தவருக்காக வாதாடுகிற வழக்கறிஞராக வருகிறார் சூர்யா.
இந்த தலைப்பு அவர்களை மேலும் வெறுப்பேற்றக்கூடும்.
ஜெய்பீமை எழுதி இயக்குபவர் த .செ .ஞானவேல். முன்னாள் பத்திரிகையாளர். அகரம் நிர்வாகத்தில் இவருக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.